< Back
மாநில செய்திகள்
செல்போன் தயாரிப்பில் இந்தியா 2-வது இடம் - மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தகவல்
மாநில செய்திகள்

"செல்போன் தயாரிப்பில் இந்தியா 2-வது இடம்" - மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தகவல்

தினத்தந்தி
|
30 Sept 2022 2:44 PM IST

செல்போன் தயாரிப்பில் உலகத்தில் 2-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது என்று மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் மத்திய எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் எலக்ட்ரானிக் துறையில் வேகமாக வளர்ந்து வருவதாக கூறினார்.

மேலும் செல்போன் தயாரிப்பில் உலகத்தில் 2-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் எலக்ட்ரானிக் தொழிற்சாலை தொடங்கி வைக்க உள்ளதாகவும், இதனால் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்