< Back
மாநில செய்திகள்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு: வெள்ள பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் பேட்டி
மாநில செய்திகள்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு: வெள்ள பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் பேட்டி

தினத்தந்தி
|
19 Dec 2023 5:44 PM IST

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உடனடியாக மின்சாரம் வழங்கினால் ஆபத்து ஏற்படக்கூடும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்.

சென்னை

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

*தென் மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது.

*தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

*9 ஹெலிகாப்டர் மூலம் 13,500 கிலோ உணவு பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

*விமானப்படை, கடற்படை மூலமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், உடனடியாக மின்சாரம் வழங்கினால் ஆபத்து ஏற்படக்கூடும்.

*பெருமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துக் கூறவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகியுள்ளது. கணிப்பு சரியாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக இருந்திருக்கும்.

*தென் மாவட்ட பெருமழை பாதிப்பு காரணமாக 10 பேர் பலியாகியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்