< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 30 பேர் கைது
|8 Oct 2023 9:39 PM IST
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியின் போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதையொட்டி, கள்ளச்சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் வந்தன. போலீசார் நடத்திய சோதனையில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ரூ.55 ஆயிரம் ரொக்கப்பணமும், ஏராளமான டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன இதுதொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி 6 இடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.