< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது - கார்த்தி சிதம்பரம் எம்.பி.
மாநில செய்திகள்

'தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது' - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

தினத்தந்தி
|
17 Feb 2024 10:03 PM IST

ஒரு கட்சி கூட கூட்டணியில் இருந்து வெளியே செல்லவில்லை என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

மதுரை,

தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாகவே இருப்பதாகவும், ஒரு கட்சி கூட கூட்டணியில் இருந்து வெளியே செல்லவில்லை என்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"தமிழகத்தில் தி.மு.க.தான் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. அனைவருக்கும் ஏற்புடைய வகையில் தொகுதி பங்கீடு நடைபெறும். தமிழகத்தில் 'இந்தியா' கூட்டணி வலுவாக உள்ளது. ஒரு கட்சி கூட கூட்டணியில் இருந்து வெளியே செல்லவில்லை. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்