< Back
மாநில செய்திகள்
சுதந்திர தினம்: சென்னை சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சுதந்திர தினம்: சென்னை சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில்

தினத்தந்தி
|
14 Aug 2024 7:01 AM IST

சென்னை சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 11 30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06055) நாளாஇ மதியம் 12 30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்னை ஆவடி வரும் ஏ சிஅதிவிரைவு சிறப்பு ரெயில் (06056) நாளை மறுநாள் காலை 5.10 மணிக்கு ஆவடி வந்தடையும்.

இந்த ரெயில் சென்டிரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் போது ஆவடி செல்லாது. நாகர்கோவிலில் இருந்து வரும் போது ஆவடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். சென்டிரல் ரெயில் நிலையம் செல்லாது.

இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் 21-ம் தேதி மாலை 3 45 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் ஏ சி எக்ஸ்பிரஸ் ரெயில் (06043) நாளை காலை 8 30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். மறுமார்க்கமாக, கொச்சுவேலியிலிருந்து நாளை (வியாழக்கிழமை) மற்றும் 22-ம் தேதி மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் ஏ சிஎக்ஸ்பிரஸ் ரெயில் (06044) நாளை மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்டிரல் வந்தடையும். கொச்சுவேலியிலிருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் கூடுதலாக பெரம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்