< Back
மாநில செய்திகள்
சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.!
மாநில செய்திகள்

சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.!

தினத்தந்தி
|
10 Aug 2023 3:00 AM GMT

சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

வருகிற 15-ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதையொட்டி, ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக, நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளிலும் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்