< Back
மாநில செய்திகள்
சுதந்திர தின போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

சுதந்திர தின போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை

தினத்தந்தி
|
11 Aug 2023 3:12 AM IST

நெல்லையில் சுதந்திர தின போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. மைதானத்தில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தேசிய கொடியை ஏற்றுகிறார். அதனை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் குடும்பத்தினரை கவுரவிக்கிறார். அதேபோல் காவலர்களுக்கு பதக்கங்கள், சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்குகிறார். நேற்று காலையில் போலீசார் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடத்தினர். இதில் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்