சுதந்திர தினம்: தலைமைச் செயலகம் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
|நாடு முழுவதும் 15-ம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
சென்னை,
நாட்டின் 77-வது ஆண்டு சுதந்திர தின விழா வருகிற 15-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றுகிறார்.
சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றுகிறார். சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். சென்னையில் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14,15 ஆகிய இரு நாட்கள் முதல்-அமைச்சரின் இல்லம் முதல் தலைமைச் செயலகம் வரை செல்லும் வழித்தடம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, டிரோன், ஏர் பலூன் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நெருங்க, நெருங்க பாதுகாப்பு கெடுபிடி நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.