< Back
மாநில செய்திகள்
கோட்டையில் சுதந்திர தின கொடி ஏற்றம்: முக்கிய சாலைகளில் நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னை
மாநில செய்திகள்

கோட்டையில் சுதந்திர தின கொடி ஏற்றம்: முக்கிய சாலைகளில் நாளை போக்குவரத்து மாற்றம்

தினத்தந்தி
|
14 Aug 2022 8:21 AM IST

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு 15-ந் தேதி (நாளை) காலை 6 மணி முதல் விழா நிகழ்ச்சிகள் முடியும் நேரம் வரை முக்கிய சாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள போக்குவரத்து வகைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதாவது, உழைப்பாளர் சிலை முதல் இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையும், கொடி மரச்சாலையிலும் அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர பிற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துச்சாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.

பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துச்சாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.

அண்ணா சாலையில் இருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துச்சாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.

முத்துச்சாமி சாலையில் இருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்