நீலகிரி
கூடலூர், குன்னூரில் அரசு பள்ளிகளில் சுதந்திர தின விழா
|கூடலூர், குன்னூரில் அரசு பள்ளிகளில் சுதந்திர தின விழா நடந்தது.
கூடலூர்
கூடலூர், குன்னூரில் அரசு பள்ளிகளில் சுதந்திர தின விழா நடந்தது.
சுதந்திர தின விழா
கூடலூர் ஓவேலி பேரூராட்சி லாரஸ்டன் எண்.4 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நிலேஷ் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் ரம்யா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் சகாதேவன் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாரியம்மாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராகினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குன்னூர்
இதேபோல் குன்னூரில் உள்ள அரசு பள்ளிகளில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதேபோல் வெலிங்டன் நல்லப்பன் தெரு கிராமத்தில் கிராம நல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்கத் தலைவர் ஜான் பீட்டர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இளைஞர் பிரதிநிதி ராஜு வரவேற்றார். முடிவில் துணை செயலாளர் ஜெயசீலன் நன்றி கூறினார்.