விருதுநகர்
அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
|சுதந்திரதினத்தையொட்டி சிவகாசியில் உள்ள அரசு அலுவலகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆர்.டி.ஓ., மேயர், யூனியன் தலைவர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.
சிவகாசி,
சுதந்திரதினத்தையொட்டி சிவகாசியில் உள்ள அரசு அலுவலகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆர்.டி.ஓ., மேயர், யூனியன் தலைவர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.
சுதந்திரதினம்
சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஆர்.டி.ஒ.. விஸ்வநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். இதில் தாசில்தார் ஆனந்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் தாசில்தார் லோகநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்ததிரதினவிழாவில் துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
மேயர்
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மேயர் சங்கீதா இன்பம் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் சங்கரன், உதவி செயற்பொறியாளர் முகம்மது சாகுல் அமீது, நகரமைப்பு அலுவலர் மதியழகன், சுகாதார அலுவலர் அபுபக்கர் சித்திக், மண்டல தலைவர் சேவுகன், வரிவிதிப்பு மற்றும் நிதி குழு தலைவர் ஜெயராணி, கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
யூனியன் அலுவலகம்
சிவகாசி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் யூனியன் தலைவர் முத்துலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். துணைத்தலைவர் விவேகன்ராஜ், அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திருத்தங்கலில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி லட்டு வழங்கினார்.
மாதா பள்ளி
சிவகாசி லயன்ஸ் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபாகர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து தாளாளர் ரமேஷ்குமார் சுதந்திரம் பற்றி பேசினார். இதில் தலைமையாசிரியர் பாண்டியன், பொறுப்பாசிரியர் மெர்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேளாங்கன்னி மாதா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் கவுன்சிலர் ரவிசங்கர் தேசிய கொடியை ஏற்றினார். இதில் தாளாளர் ஜான்மார்ட்டின், தலைமையாசிரியர் மெட்டில்டாமேரி புஷ்பம் ஆகியோர் கலந்து கொண்டனர். காளையார்குறிச்சி சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் பள்ளி தலைமையாசிரியர் டேனியல், ஆசிரியர் எப்சி வடிவுக்கரசி உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.