< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினவிழா
|16 Aug 2023 12:45 AM IST
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 77-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது விழாவுக்கு பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார். இதில் மாவட்ட குடும்ப நல நீதிபதி தனசேகரன் மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி மூர்த்தி, சார்பு நீதிபதி அண்ணாமலை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராஜா மகேஷ்வர் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகள் அட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் தலைவர் மணிவண்ணன் மற்றும் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.