அரியலூர்
முத்துசேர்வாமடம் ஊராட்சி பள்ளியில் சுதந்திர தின விழா
|மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் ஊராட்சி பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் ஊராட்சி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அழகேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற சரண்யாவுக்கு ரூ.10 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த பிரேமாவுக்கு ரூ.8 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த சிவானந்தத்துக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. சர்வதேச தடகள போட்டியில் 3 தங்க பதக்கம் வென்ற ஆகாஷ்க்கு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி ரமேஷ் பரிசுகளை வழங்கினார். மேலும் இந்த பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள் மாவட்ட அளவில் நீட் மற்றும் ஜெ.இ.இ. (ஐ.ஐ.டி) சிறப்பு பயிற்சி பள்ளியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் காமராஜ், கார்த்திக், பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பழனிவேல் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.