< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா
|15 Aug 2022 10:41 PM IST
தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா தாளாளர் மணிமாறன் தேசிய கொடி ஏற்றினார்
தியாகதுருகம்
தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளியில் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி முதல்வர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மவுண்ட் பார்க் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் சுஜாதா, துணை முதல்வர்கள் முத்துக்குமரன், வினோதினி, டயானா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி தாளாளர் மணிமாறன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆடிட்டர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். இதேபோல் அசகளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சாமிதுரை தேசிய கொடி ஏற்றி மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.