< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
மதனகோபாலசுவாமி கோவிலில் சுதந்திர தினவிழா
|16 Aug 2023 12:50 AM IST
மதனகோபாலசுவாமி கோவிலில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
பெரம்பலூரில் உள்ள பஞ்சபாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் 77-வது சுதந்திரதினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கம்பத்து ஆஞ்சநேயர் சன்னதியை ஒட்டிய ராஜகோபுரம் அருகே கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன் தலைமையில், கோவில் பரம்பரை ஸ்தானீகர் பொன்.நாராயணன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன், கோவில் பரிஜாரகர் சம்பத், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.