சிவகங்கை
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா
|தேவகோட்டை நகர காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தேவகோட்டை
தேவகோட்டை நகர காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் நகர் மன்ற தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான வேலுச்சாமி தேசிய கொடி ஏற்றினார். தியாகிகள் பூங்காவில் தியாகியின் வாரிசு முல்லை காந்தி ராமசாமி தேசிய கொடி ஏற்றினார். நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மீராஉசேன் தலைமை தாங்கினார். நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் இருமதி துரைகருணாநிதி, மூத்த உறுப்பினர் தியாகராஜன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஜான்சிராணி, வட்டார தலைவர் பூங்குடி வெங்கடாசலம், வள்ளாளமோகன், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் காமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் அஜிஸ்கான், நகர் மன்ற உறுப்பினர்கள் பவுல், பழனிவேல் மற்றும் தனுஷ்கோடி ரவி, செந்தில்நாதன், செந்தில்குமார், ராஜா, சுந்தரமூர்த்தி, பெருமாள், கார்த்தி, பருத்திகுடி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் நஜ்முதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.