திருவள்ளூர்
சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா
|சோழவரம்,
பொன்னேரி அடுத்த சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். துணை தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் ராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஷகிலா சகாதேவன், மொழியரசிசெல்வம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக மேலாளர் சுபதாஸ் நன்றி கூறினார்.
அதேபோல் பெருங்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்வீட்டிகோபி தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். ஒரக்காடு ஊராட்சி மன்ற தலைவர் நீலாசுரேஷ், ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சற்குணம், காரனோடை ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா ராமச்சந்திரன், சோத்துபெரும்பேடு ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி சீனிவாசன், மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துணைத் தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல் முன்னிலையில் தலைவர் சுகந்திவடிவேல், காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன் ஆகியோர் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினர்.