தூத்துக்குடி
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
|உடன்குடியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
உடன்குடி:
சுதந்திர தினத்தையொட்டி உடன்குடி யூனியன் அலுவலகத்தில் யூனியன் தலைவர் டி.பி.பாலசிங் கொடியேற்றினார். துணைத்தலைவர் மீரா சீராசுதீன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செட்டியாபத்து ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் தேசிய கொடி ஏற்றினார். துணைத்தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவர் அஸ்ஸாப் அலி பாதுஷா கொடியேற்றினார்.
பரமன்குறிச்சி ஊராட்சி மன்றத்தில் தலைவர் இலங்காபதி, வெள்ளாளன்விளை ஊராட்சி மன்றத்தில் தலைவர் ராஜரத்தினம், வெங்கட் ராமானுஜபுரம் ஊராட்சி மன்றத்தில் தலைவர் பாலசரஸ்வதி ஆகியோர் கொடியேற்றினர். உடன்குடி மெயின் பஜாரில் வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப், தேசிய கொடி ஏற்றினார். நகர தலைவர் முத்து, தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனீஷ், மகளிர் அணி தலைவி அன்புராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடன்குடி அருகே மணப்பாடு கலங்கரை விளக்கு வளாகத்தில் முதன்மை அதிகாரி மதனகோபால் தேசிய கொடி ஏற்றினார். பிரபு, செந்தில்குமார் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.