< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
சுதந்திர தின விழா
|17 Aug 2022 12:19 AM IST
சுதந்திர தின விழா
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை பெல் அடுத்த சீக்கராஜபுரத்தில் உள்ள ரிஷி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார்.
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சுந்தரி புகழேந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் விதத்தில் நடனம், யோகா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் பள்ளித் தாளாளர் புகழேந்தி, செயலாளர் கார்த்திக், நிர்வாக அலுவலர் ஏகாம்பரம் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் மல்லீஸ்வரி நன்றி கூறினார்.