< Back
மாநில செய்திகள்
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
17 Aug 2022 12:03 AM IST

நாகை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

வெளிப்பாளையம்:

நாகை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சுதந்திர தின விழா

நாகை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, பொறியாளர் ஜெய கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகை தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் முன்னிலையில் தலைமை அஞ்சலக அதிகாரி திலகவதி தேசியக்கொடி ஏற்றினார். நாகை அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் ராஜாராமன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தலைவர் அமிர்தராஜா தேசியக் கொடி ஏற்றினார். நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் சுகுமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சீனிவாசன், மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகை ரெயில்வே பாதுகாப்பு படை வளாகத்தில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

திருமருகல்

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சுதந்திர விழாவில் திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கண்ணன் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.இதில் இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திருமருகல் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் திலக்பாபு, திட்டச்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவர் அப்துல் பாசித், திட்டச்சேரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், திருக்கண்ணபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்.

கீழையூர்-தலைஞாயிறு

கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த ஜோதிபால்ராஜ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ஸ்ரீதர், வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல தலைஞாயிறு பேரூராட்சியில் தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.

தலைஞாயிறு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார். வாய்மேடு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கன்னிகா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். வாய்மேடு ஊராட்சி மன்றத்தில் தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

மேலும் செய்திகள்