< Back
மாநில செய்திகள்
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
16 Aug 2022 12:02 AM IST

கோவில்பட்டியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

நேஷனல் பொறியியல் கல்லூரி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 75-வது இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமை தாங்கினார். இந்திய ராணுவ மருத்துவப் படையின் ஓய்வு பெற்ற அதிகாரி கர்னல் மருத்துவர் வி.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கல்லூரியின் அனைத்துத்துறை கூட்டமைப்புகள் மற்றும் கிளப்கள் சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மாணவி எஸ்.சுஜி வரவேற்று பேசினார். மாணவி எம்.கவிகுரு சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். மாணவி ஜி.கீர்த்திகாஸ்ரீ சுதந்திர தினவிழா சிறப்புரையாற்றினார். இறுதியாண்டு மாணவர் சி.எ.நரேன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஏ.ராஜேஷ்வரன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ்.மதிவண்ணன், இந்திய ராணுவப் பள்ளி ஆசிரியர், மனநல ஆலோசகர் மற்றும் யோகா பயிற்சியாளர் ஆர்.இந்திரா கலந்து கொண்டனர். முன்னதாக லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமையில் சுதந்திர தின விழா நடந்தது.

சப்-கோர்ட்டு

கோவில்பட்டி சப்-கோர்ட்டில் நடந்த விழாவில் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். குற்றவியல் நீதிபதி பீட்டர், அரசு வழக்கறிஞர் எஸ்.வி. சம்பத்குமார், வழக்கறிஞர்கள் சந்திரசேகர், நாகராஜன், முத்துக்குமார், கார்த்திபராஜ், ஸ்ரீதர், நீதிப்பாண்டியன், சங்கர் கணேஷ் சட்டக்குழு ஜோன்ஸ் இமானுவேல், மரிக்கொழுந்து மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

உதவி கலெக்டர் அலுவலகம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் மகாலட்சுமி தேசியக்கொடி ஏற்றினார். கோவில்பட்டி போலீஸ் மைதானத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தேசிய கொடி ஏற்றினார்.

தாலுகாஅலுவலகம் முன்பு தாசில்தார் சுசிலா தேசிய கொடி ஏற்றினார். நகரசபை அலுவலகம் முன்பு நகரசபை தலைவர் கா. கருணாநிதி தேசிய கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஆணையாளர் ராஜாராம், சுகாதார அலுவலர் நாராயணன், என்ஜினீயர் ரமேஷ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

யூனியன் அலுவலகம்

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தேசிய கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஆணையாளர் சுப்புலட்சுமி, மேலாளர் முத்துப்பாண்டி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சுதந்திர தின விழாவை யொட்டி சமபந்தி விருந்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நகரசபை தலைவர் கா.கருணாநிதி பெண்களுக்கு இலவச சேலை வழங்கினார். கோவில் முன்பு தேசிய கொடியை நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி ஏற்றினார்.

மேலும் செய்திகள்