< Back
மாநில செய்திகள்
சுதந்திர தின விழா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

சுதந்திர தின விழா

தினத்தந்தி
|
15 Aug 2022 11:53 PM IST

வேப்பங்காடு சி.பா.ஆதித்தனார் பள்ளியில் சுதந்திர தின விழா

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்காடு சி.பா.ஆதித்தனார் நினைவு தொடக்கப்பள்ளி மற்றும் சி.பா.சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவில் பள்ளிச்செயலாளர் ஆதிலிங்கம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிர்வாக குழு உறுப்பினர் சங்கரநாராயணன், நங்கைமொழி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர். விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்