< Back
மாநில செய்திகள்
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
15 Aug 2022 11:48 PM IST

சீர்காழி எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் சுதந்திர தினவிழா நடந்தது

சீர்காழி எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி அன்பழகன் வரவேற்று பேசினார். விழாவில் தேசிய கொடியினை எம்.எல்.ஏ. ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றிய துணை செயலாளர் முருகன், கூட்டுறவு சங்க செயலாளர் சக்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உதவி கலெக்டர் அலுவலகம்

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் உதவி கலெக்டர் யுரேகா தேசியக்கொடியை ஏற்றினார். பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சண்முகம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை தலைமை தபால் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ரமணி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி பொறியாளர் சனல்குமார் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்