< Back
மாநில செய்திகள்
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
15 Aug 2022 11:25 PM IST

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் சுதந்திர தினவிழா வங்கி தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கே.வி.ராமமூர்த்தி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவில் வங்கியின் பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி, துணை பொதுமேலாளர்கள், உதவி பொது மேலாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்