< Back
மாநில செய்திகள்
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
15 Aug 2022 10:56 PM IST

கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதியில் 75-வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி

ஆர்.கே.எஸ்.கல்வி நிறுவனம்

கள்ளக்குறிச்சி அருகே இந்தியில் உள்ள டாக்டர்.ஆர்.கே.எஸ் கல்வி நிறுவனங்களில் 75-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.மகுடமுடி தலைமை தாங்கி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். டாக்டர்.ஆர்.கே.எஸ். மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக்டர்.மணிவண்ணன் முன்னிலை வைத்தார். கல்லூரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு என்.எஸ்.எஸ். மாணவர்கள் மற்றும் பசுமை நேய தன்னார்வலர்கள் சார்பில் 75 மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் பள்ளி முதல்வர் மாலதி, கல்லூரி துணை முதல்வர் ஜான்விக்டர் மற்றும் உதவி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

பாலிடெக்னிக் கல்லூரி

கள்ளக்குறிச்சி அருகே மேலூரில் உள்ள முருகா பாலிடெக்னிக் கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார். தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் அல்லாபக்‌ஷ் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் கல்லூரி முதல்வர் கண்ணன், துணை முதல்வர் பாஸ்கர், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் விஜயபாஸ்கர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஒன்றிய அலுவலகம்

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர். இதில் துணை தலைவர் நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இந்திராணி, பன்னீர்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அசகளத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கலியன் பிரிதிவிமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவி அமுதா தட்சிணாமூர்த்தி, முடியனூரில் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பு இளங்கோவன், வேலாக்குறிச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எத்திராசு, கொங்கராயபாளையம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்