கரூர்
சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
|குளித்தலை-தோகைமலை பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
சுதந்திர தினவிழா
குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினத்தையொட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முககனி தேசிய கொடியேற்றினார். நீதிபதிகள் பாலமுருகன், பிரகதீஸ்வரன், வக்கீல் சங்க தலைவர் சாகுல்அமீது, வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குளித்தலை நகராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சகுந்தலாபல்லவிராஜா தேசியக்கொடி ஏற்றி வைத்து, நகராட்சியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக டிரைவராக சிறப்பாக பணியாற்றிய குமார், கருப்பண்ணன் ஆகிய 2 பேருக்கும் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழை அவர் வழங்கினார். மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு இனிப்பு வழங்கினார். நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில் ஆணையர் பொறுப்பு மனோகர், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் விஜயவிநாயகம் தேசிய கொடி ஏற்றினார். துணை தலைவர் இளங்கோவன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மருதூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சகுந்தலா தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். செயல் அலுவலர் விஜயன், பேரூராட்சி துணைத் தலைவர் நாகராஜன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
தோகைமலை
தோகைமலை போலீஸ் நிலையத்தில் சுதந்திர தினத்தைெயாட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரூபிணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மதியழகன், ரசியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய துணை சேர்மன் பாப்பாத்தி சின்ன வழியான் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய ஆணையர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர் சுகந்தி சசிகுமார் முன்னிலை வகித்தார். இதில், ஒன்றிய கவுன்சிலர்கள் முருகேசன், வளர்மதி ஆசைக்கண்ணு, அம்பாள் குமார், சுமதி, தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர் இதேபோல் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளிலும்அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.