< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
|17 Aug 2023 12:15 AM IST
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை ஏ.வி.சி பாலிடெக்னிக், பொறியியல், கலை கல்லூரிகளில் சுதந்திர தின விழா நடந்தது. விழாவுக்கு ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் நிர்வாகியும், முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியுமான வெங்கட்ராமன் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். விழாவில் பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர் வளவன், முதல்வர் கண்ணன், பொறியியல் கல்லூரியின் இயக்குனர் செந்தில்முருகன், முதல்வர் சுந்தர்ராஜ், கலைக்கல்லூரியின் முதல்வர் நாகராஜன், துணை முதல்வர் மதிவாணன், தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் ரவி செல்வம், மற்றும் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பலதுறைகளை சேர்ந்த முன்னாள், இன்னாள் பேராசிரியர்கள், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ் சார்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.