சிவகங்கை
சுதந்திர தின கொண்டாட்டம்
|தேவகோட்டையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
தேவகோட்டை
தேவகோட்டையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை நகர காங்கிரஸ் (கிழக்கு) தலைவரும், ஐகோர்ட்டு வக்கீலுமான சஞ்சய் கொடியேற்றினார்.
விழாவில் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் கவிஞர் அப்பச்சி சபாபதி முன்னிலை வகித்தார்.
இந்தநிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் ஆறாவயல் மகேந்திரன், தேவகோட்டை வட்டார நிர்வாகிகள் வென்னியூர் புகழேந்தி, தென்னீர் வயல் முத்து மனோகரன், இளங்குடி முத்துக்குமார், செலுகை பெத்து, தளுதனூர் முத்துவேல், பனிப்புலான்வயல் செபஸ்தியான், கண்ணங்கோட்டை சிரவிளிநாதன், புளியால் ஜெய்னுதீன்ரசாக், சக்கந்தி ஆரோக்கியசாமி, சந்தானம், சண்முகநாதபுரம் சிந்து, கண்ணங்குடி வட்டாரம் களத்தூர் பழனிசாமி, அன்பு, கல்லல் வட்டாரம் திலகர், பெரியசாமி, தேவகோட்டை நகர் காங்கிரஸ் கமிட்டி வேலு, சங்கர், வீரமணி, தி.மு.க முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜாகிர் உசேன் மற்றும் ஜாபர், உடப்பன்பட்டி கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.