< Back
மாநில செய்திகள்
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
16 Aug 2023 12:15 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. விழாவிற்கு நகராட்சி ஆணையர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் நகரசபை தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.

இதேபோல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றிய குழு துணைத்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

செம்பனார்கோவில்

செம்பனார்கோவிலில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நிவேதா முருகன், எம்.எல்.ஏ தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கலந்துகொண்டனர். தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தாசில்தார் சரவணன் தேசிய கொடி ஏற்றி வைத்தார் பேசினார். பரசலூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகமும் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

கொள்ளிடம்

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயபிரகாஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய துணைத்தலைவர் பானுசேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கொள்ளிடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சார் பதிவாளர் ஆரோக்கியராஜ் தேசிய கொடி ஏற்றினார்.

திருவெண்காடு

திருவெண்காடு அருகே மணி கிராமம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முல்லை வேந்தன் தேசியக்கொடியை ஏற்றினார். இதில் துணைத் தலைவர் சகாபுதீன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். காவேரி பூம்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் தலைமையில் சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

குத்தாலம்

குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஒன்றிய ஆணையர் உமாசங்கர், துணைத்தலைவர் முருகப்பா,மேலாளர் சாந்தி, சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் இந்துமதி தேசிய கொடி ஏற்றி வைத்தார். தேர்வுநிலை பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தேசிய கொடி ஏற்றினார்.

சீர்காழி

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தேசியகொடி ஏற்றினார். இதில் துணைத்தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், ஆணையர்கள் சரவணன், இளங்கோவன் கலந்து கொண்டனர், மாவட்ட கவுன்சிலர் விஜயஸ்வரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தேவேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல சீர்காழி நகராட்சியில் நடந்த விழாவில் நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் தேசிய கொடி ஏற்றினார். இதில் துணைத்தலைவர் சுப்பராயன், நகர அமைப்பு ஆய்வாளர் மரகதம், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் . மேலாளர் காதர் கான் ஆகியோர் கல்ந்து கொண்டனர். விழாவில் தேசிய கொடியை நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்களை வழங்கி நகராட்சி வளாகத்தில் மரக்கன்று நடும் பணியினை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன், நகர மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், வேல்முருகன், முபாரக் அலி, தேவதாஸ், கிருஷ்ணமூர்த்தி, ராமு, முடிவில் நகராட்சி பணியாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்