நாகப்பட்டினம்
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
|நாகை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
திட்டச்சேரி:
நாகை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
திருமருகல்
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாகூர்
நாகூர் தர்கா அலுவலகம் முன்பு தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முகமது காஜி ஹீசைன் சாஹிப் தேசியக்கொடியை ஏற்றினார். இதில் போர்டு டிரஸ்டிகள் மற்றும் ஆலோசனை குழு தலைவர் முகமது கலிபா சாஹிப், அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாகூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தேசியக்கொடியை ஏற்றினார். இதில் முகமது ஷா நவாஷ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தலைஞாயிறு
தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலம் அரசு உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, தலைஞாயிறு அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
சிக்கல்
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் வாசுகிநாகராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் புருஷோத்தமதாஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லாரன்ஸ், முத்துக்குமரன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் தாசில்தார் ரமேஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
கீழ்வேளூர் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் பேரூராட்சி துணை தலைவர் சந்திரசேகரன், செயல் அலுவலர் குகன், பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர்.
வேதாரண்யம்
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் தமிழாஅன்பழகன், நகராட்சியில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெயசீலன், வேதாரண்யம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திர போஸ், கடலோர காவல் குழும அலுவலகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம், வேதாரண்யம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ்குமார் ஆகியோர் தேசியகொடியினை ஏற்றி வைத்தனர்.