< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆர்.பி.எப். வீரர்கள் மேற்கொண்ட பைக் பேரணி - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் வரவேற்பு
|14 Aug 2022 7:36 PM IST
டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த இருசக்கர வாகன பேரணியை மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் கொடியசைத்து வரவேற்றார்.
புதுடெல்லி,
இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ரெயில்வே பாதுகாப்புப் படையினர் தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணியை மேற்கொண்டனர்.
கடந்த ஜூன் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த இருசக்கர வாகன பேரணி நாட்டின் முக்கியமான 75 இடங்களுக்கு தொடர்ந்தது. சுமார் 550 மாவட்டங்களை அடைந்த ஆர்.பி.எப். வீரர்கள், 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த பிரம்மாணட பேரணியில் அமைதி, சகோதரத்துவம், தேசப்பற்று குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த இருசக்கர வாகன பேரணியை மத்திய ரெயில்வேத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் கொடியசைத்து வரவேற்றார்.