அதிகரிக்கும் பாதிப்பு- தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா
|தமிழ்நாட்டிலும் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது.
சென்னை,
கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கேரளாவில் கடந்த 14-ந்தேதி ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் மாதிரியை பரிசோதனை செய்தபோது அது 'ஜே.என்.- 1' என்ற உருமாறிய புதுவகை கொரோனா என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலும் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாக பதிவாகி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று 228 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் 5 பேர், திருவாரூரில் 9 பேர், திருவள்ளூரில் 2 பேர், கோவை மற்றும் விழுப்புரத்தில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல, தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.