< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
|26 Jun 2022 12:02 AM IST
அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளில் குற்றாலத்தில் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
தென்காசி,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை விட்டு விட்டுப் பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
அங்குள்ள ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் வார விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகளில் அதிக அளவில் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.