< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பால் மண் அரிப்பு அதிகரிப்பு - புதிய கான்கிரீட் தளம் அமைக்க முடிவு

22 Dec 2022 2:13 PM IST
மேட்டூர் அணையில் நீர் திறப்பின் போது அதிக அளவு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், புதிய கான்கிரீட் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம்,
மேட்டூர் அணையில் 16 கண் மதகு வழியாக நீர் திறப்பின் போது அதிக அளவு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், புதிய கான்கிரீட் தளம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக பேரவை குழு தலைவர் உதயசூரியன் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2021-2023 ஆம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழிக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை குழு தலைவர் உதயசூரியன் தலைமை வகித்தார்.
இந்த நிலையில் அந்த கூட்டத்தில் பேசிய உதயசூரியன், மேட்டூர் அணையில் 16 கண் மதகு வழியாக நீர் திறப்பின் போது அதிக அளவு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும், இதற்காக 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் தளம் அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.