< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
|12 Dec 2022 2:18 AM IST
பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர்,
தொடர்மழை காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.