< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருவண்ணாமலை கோவிலில் அதிகரித்த பக்தர்கள் கூட்டம் - 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
|24 Dec 2023 10:37 PM IST
தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 2 நாட்களாக பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. தொடர் விடுமுறை என்பதால் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் 5 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.