< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புழல் ஏரிக்கு நீர்வரத்து 700 கன அடியாக அதிகரிப்பு
|4 Nov 2023 11:26 AM IST
புழல் ஏரியில் தற்போது 2,709 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
சென்னை,
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் புழல் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன்படி இன்று புழல் ஏரிக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 235 கன அடியில் இருந்து 700 கன அடியாக உயர்ந்துள்ளது. மொத்தம் 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,709 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.