செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
|தொடர் மழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,300 கன அடியாக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு,
தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 260 கன அடியாக இருந்தநிலையில் நீர்வரத்து தற்போது 1,300 கன அடியாக அதிகரித்துள்ளது. வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம், நேமம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளும் நீர் நிறைந்து காணப்படுவதால் அங்கிருந்தும் உபரி நீர் மற்றும் மழை நீர் அதிக அளவில் வருவதால் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் மழை தொடர்ந்து பெய்யும் என்பதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.