< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
நீர்வரத்து அதிகரிப்பு; ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை
|16 Aug 2023 1:57 PM IST
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி,
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அணைகளில் 14 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் உடனடியாக பரிசல்களை கரைக்கு கொண்டு வந்தனர். பரிசல் இயக்க தடை விதிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.