< Back
மாநில செய்திகள்
முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மாநில செய்திகள்

முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தினத்தந்தி
|
17 July 2022 5:48 AM IST

முல்லைப் பெரியாறு அணை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நீரால் முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தேனி,

தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாற்றில் அதிக அளவு நீர் செல்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரும், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழை நீரும் முல்லைப் பெரியாற்றில் கலந்து நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் 1,867 கனஅடி நீர் லோயர் கேம்ப், கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக வைகை அணையை சென்றடைகிறது. இதனால் அங்கு கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்