< Back
மாநில செய்திகள்
வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
மாநில செய்திகள்

வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

தினத்தந்தி
|
27 Nov 2022 4:28 PM IST

கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

கொடைக்கானல்,

கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, பில்லர் ராக், குணா குகை, வட்டக்கானல் அருவி, பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் இயற்கை அழகினை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் பனிமூட்டத்துடன் கூடிய குளுமையான சூழல் நிலவி வருகிறது. இந்த இதமான காலநிலையை அனுபவித்தவாறு சுற்றுலா பயணிகள் செல்பி, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும் ஏரியை சுற்றி, சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் நகர்ப்பகுதி மற்றும் மலைச்சரிவில் சற்று போக்குவரத்து நெரிசல், காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் சிறு குறு வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்