< Back
மாநில செய்திகள்
பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
மாநில செய்திகள்

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

தினத்தந்தி
|
19 May 2022 9:19 PM IST

பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 788 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சென்னை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்தத் தண்ணீர் கடந்த 8-ந் தேதி காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்று இரவே பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. பூண்டி ஏரிக்கு ஆரம்பத்தில் வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது.

அதன் பின்னர் இது படிப்படியாக அதிகரித்தது. இன்றைய நிலவரப்படி பூண்டி ஏரியில் வினாடிக்கு 610 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியின் நீர்மட்டம் 27.60 அடி ஆக உள்ள நிலையில், 1.246 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

அதே சமயம் பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 788 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில் புழல் ஏரிக்கு வினாடிக்கு 390 கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 398 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் செய்திகள்