< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வரத்து அதிகரிப்பு; தக்காளி விலை குறைந்தது
|19 July 2023 7:36 AM IST
தக்காளி வரத்து கணிசமாக அதிகரித்ததால் விலை குறைந்துள்ளது.
சென்னை,
தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. கடந்த வார இறுதியில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை ஆனது. அதற்கு முந்தைய நாட்களில் ஒரு கிலோ ரூ.140 வரை சென்றது. தொடர்ந்து விலை அதிகரித்து மொத்த மார்க்கெட்டிலேயே ரூ.200 வரை செல்லலாம் என்று சொல்லப்பட்டது.
ஆனால் இன்று தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.125க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ. 25 விலை குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வரத்து கணிசமாக அதிகரித்ததால் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.