< Back
மாநில செய்திகள்
நல்லெண்ணெய் விலை உயர்வு
விருதுநகர்
மாநில செய்திகள்

நல்லெண்ணெய் விலை உயர்வு

தினத்தந்தி
|
14 Aug 2023 12:23 AM IST

விருதுநகர் மார்க்கெட்டில் நல்லெண்ணெயின் விலை உயர்ந்துள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மார்க்கெட்டில் நல்லெண்ணெயின் விலை உயர்ந்துள்ளது.

துவரம் பருப்பு

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.8,400 முதல் ரூ.8,800 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.11,800 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.10,200 ஆகவும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.100 விலை குறைந்து ரூ.10,200 ஆகவும், பாசிப்பயறு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு 100 கிலோ மூடை ரூ.100 விலை குறைந்து ரூ.12,500 முதல் ரூ.14,000 வரையிலும் விற்பனையானது.

மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.100 விலை குறைந்து ரூ.3,200 முதல் ரூ.3,500 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.2,800 முதல் ரூ.3,100 வரையிலும் விற்பனை ஆனது. முண்டு வத்தல் குவிண்டால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.24 ஆயிரம் முதல் ரூ.26 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

நல்லெண்ணெய்

கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.3,100 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.330 விலை உயர்ந்து ரூ.6,765 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.30 விலை குறைந்து ரூ.1,390 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது.

நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.100 விலை உயர்ந்து ரூ.6,100 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,350 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.20 விலை உயர்ந்து ரூ.4 ஆயிரம் ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.5,850 ஆகவும், பொரிகடலை 50 கிலோ ரூ.4,250 ஆகவும் விற்பனை ஆனது.

மைதா முதல் ரகம் ரூ.4,380 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,500 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,150 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,470 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.1,410 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.5,600 முதல் ரூ.6,200 வரையிலும், பட்டாணி பருப்பு ரூ.6 ஆயிரம் ஆகவும், மசூர் பருப்பு ரூ.10,100 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோவிற்கு ரூ.2,200 விலை குறைந்து ரூ.18,900 ஆகவும், ஏ ரகம் ரூ.1,400 விலை குறைந்து ரூ.19,200 ஆகவும், சி ரகம் ரூ.300 விலை குறைந்து ரூ.17 ஆயிரம் ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.2,450 விலை உயர்ந்து ரூ.13,150 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.1,900 விலை உயர்ந்து ரூ.11,500 ஆகவும் விற்பனையானது.

மேலும் செய்திகள்