< Back
மாநில செய்திகள்
பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மாநில செய்திகள்

பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தினத்தந்தி
|
6 Aug 2022 8:43 PM IST

பில்லூர் அணைக்கு 2-வது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு 2-வது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி உபரி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் கடந்த 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்