< Back
மாநில செய்திகள்
ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து  அதிகரிப்பு
கரூர்
மாநில செய்திகள்

ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தினத்தந்தி
|
7 Dec 2022 6:59 PM GMT

ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தண்ணீர் திறப்பு

அமராவதி ஆற்றுப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் 90 அடி கொண்ட அமராவதி அணைக்கு தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி 702 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது.

இதில் 626 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் அணையில் இருந்து அமராவதி ஆற்றில் 601 கனஅடியும், புதிய பாசன கால்வாயில் 13 கனஅடியும் வெளியேற்றப்பட்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்நிலையில் நேற்று அமராவதி ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் சின்னதாராபுரம் வழியாக ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வந்து சேர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி தடுப்பணைக்கு 2189 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஆண்டாங்கோவில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனை அப்பகுதி பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர். மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்