< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து 12,000 கன அடியாக அதிகரிப்பு
|31 Aug 2024 8:23 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்றைய நிலவரப்படி நீர்வரத்து 12,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
தர்மபுரி,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரெனெ நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை 5,000 கன அடியாக இருந்த நிலையில், இன்று நீர்வரத்து 12,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.