< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொரோனா பரவல் அதிகரிப்பு; மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்
|28 May 2022 4:01 AM IST
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மராட்டியம், டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழககத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் தேனாம்பேட்டை, அடையாறு, அண்ணாநகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் தொற்று அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், தொற்று பரவல் அதிகம் உள்ள இடங்களில் தீவிரமான கண்காணிப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.