< Back
மாநில செய்திகள்
கொரோனா தொற்று அதிகரிப்பு: மாவட்ட கலெக்டர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் கடிதம்
மாநில செய்திகள்

கொரோனா தொற்று அதிகரிப்பு: மாவட்ட கலெக்டர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் கடிதம்

தினத்தந்தி
|
19 Jun 2022 1:37 AM IST

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் தமிழகத்தில் புதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் 295 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 100 படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

லேசான அறிகுறிகள் இருந்தால் பாரசிட்டாமல், சிங்க், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கி தனிமைப்படுத்த வேண்டும் என்றும் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவை ஆக்சி மீட்டர் மூலம் பரிசோதிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வீட்டு தனிமையில் உள்ளவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தினசரி கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்