< Back
மாநில செய்திகள்
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில்  வருமான வரித்துறை சோதனை
மாநில செய்திகள்

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை

தினத்தந்தி
|
3 Nov 2023 7:18 AM IST

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

சென்னை,

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருவண்னாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.


மேலும் செய்திகள்